
தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது - திமுக கூட்டணியில்
நாஞ்சில் சம்பத் 50 கேட் கிறார். மருத்துவர் ஐயா மதிமுக விற்கு 50 என்றால் பமக விற்கு 55 கேட்ப்பார். வலதும் இடதும் சென்றமுறை போட்ட கணக்கு எல்லாம் ஒத்துவராது, முறையே 20 வேணுமாம். திண்டிவனத்தார் வேற குறைந்தது 60 கேட்டிருக்கிறார். அப்ப நல்ல கணக்கு என்ன என்றால்.....
காங்கிரஸ் - 60
மதிமுக - 50
பமக - 55
சிபிஐ - 20
சிபிஎம் -20
------
205
------
மீதமுள்ள இடத்தை Rm.வீரப்பன், முஸ்லிம் கட்சிகளின் பிரிவுகள் என பிரித்து கொடுத்துவிட்டால் எந்த சச்சரவும் இருக்காது.( கார்திக்கையும் சேர்த்துகங்கப்பா....)
என்ன................. கலைஞர் என்ன பண்ணுவாரா??????
அதற்கும் ஒரு ஈஸி வழி ஈருக்கிறது.
அதிமுக 121
திமுக 121
என்று கூட்டணி வச்சு ஆளுக்கு இரண்டரை வருடம் ஆள வேண்டியது தான். என்ன அம்மா ஆளும் சமயம் கலைஞர் "உள்ள" இருக்கனும். கலைஞர் ஆளும் போது அம்மா "உள்ள" இருப்பாங்க அவ்ளோதான்.
அப்போ மேண்மை தாங்கிய திருவாளர் பொதுஜனமா...................
5 வருஷமும் " உள்ளதான்"
5 Comments:
Rasiththean.
Thanks and regards, PK Sivakumar
By
PKS, at 11:40 AM
இப்படியும் யோசிக்கமுடியுமா? வித்தியாசமான பதிவு நண்பரே.
By
b, at 5:31 PM
நன்றி PKS.
மூர்த்தி உங்கள விடவா....அப்படியே சிவன் காதில ஒரு blu tooth ம் மாட்டிவிட்ருங்க.
By
manasu, at 7:37 PM
அடா அடா அடா.... என்னவொரு யோசனை.
ஆனால் உங்க அளவுக்கு அவங்க எல்லாம் இல்லை.... எல்லாம் உஷாரான பார்டிங்க..
By
Unknown, at 1:47 AM
thanks dubai vaasi.... ICC meeting pohalaya
By
manasu, at 7:06 PM
Post a Comment
<< Home