.comment-link {margin-left:.6em;}

Chumma......

Monday, August 07, 2006

நன்றி.... நன்றி....

குணவதிக்கு சிவகாசி மெஃப்கோ ஷ்லெங் கல்லூரியில் ஐ.டி பிரிவில் இடம் கிடைத்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன் ரூ 16000/= க்கு காசோலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அவரின் தாயாரும் வந்து பெற்றுக்கொண்டார்கள்.

உதவியவர்கள் அளித்த தொகையும் என் பங்கும்,

1. ரூ.3000
2.ரூ.4590
3.ரூ.2000
4.ரூ.1001
5.ரூ. 5409 ( என் பங்காய்)

உதவிய யாரும் பெயர் வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

பதிவிற்கு இணைப்பு கொடுத்து உதவிய பொன்ஸிற்கு மிகுந்த நன்றிகள்.

மேலும் திரு.வாசன் சுப்ரமணியம் அவர்கள் தான் நேரிட்டு குணவதிக்கு எல்லா உதவிகளும் செய்வதாய் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

உதவியவர்களின் மின்னஞ்சல் முகவரி குணவதியிடம் கொடுத்திருக்கிறேன். குணவதியும் நன்றி சொல்லி மெயில் அனுப்பி இருக்கலாம்.

மீண்டும் எல்லோருக்கும் நன்றிகள்.

மனதில் ஒரு சின்ன நிறைவு.

Sunday, July 02, 2006

பின்னூட்ட நாயகியின் திடீர் சென்னை விஜயம்!

முதலில் இந்து சாமிகளுக்கு "அந்த" மூன்று நாட்கள் வருமா? மச்சானின் மடியில்!! ஆரிய திராவிட ராஸ்கல்கள் யார்? என்றோ தான் தலைப்பிட நினைத்தேன். (அதிகம் பார்வையிடபடவேண்டுமென்பதற்காய்)பின் சர்ச்சைக்குறிய தலைப்பு வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன்.

பின் தான் எல்லோரும் அறிந்த துளசியக்கா பெயரை உபயோகிக்கலாம் என்று துளசியக்காவின் பெயர். துளசியக்கா சாரி, ப்ளீஸ் தவறென்றால்.

தலைப்பிற்கும், பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சரி விஷயத்திற்கு வரேன், சில வாரங்களுக்கு முன் நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். அதை இணைத்தும் உள்ளேன். எதேனும் உதவலாம் என்று நினைத்தபொழுது,கடந்த ஆண்டு என்றென்றும் அன்புடன் பாலா செய்ததும், சில பதிவுகளுக்கு முன்னால் நம்ம தேவ் எழுதியதும் நினைவிற்கு வந்தது. நாம் மட்டும் செய்தால் சிறிய அளவோடு மு டிந்துவிடும். நம் வலைமக்களையும் துணைக்கழைப்போமே என்று இந்த பதிவு.

வீட்டில் மனைவிக்கு தெரிவித்து, குணவதியோடு பேச சொன்ன போது இதுவரை எந்த பெரிய உதவியும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.மதுரையின் சிறப்பு வாய்ந்த தியாகராஜர் பொறியில் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார் குணவதி.

சென்ற ஆண்டு கெளசல்யா போல் இந்த முறை குணவதியாய் இருக்கட்டுமே....

குணவதி போல், நானும் நம்பிகையோடு......

உதவ விருப்பம் உள்ளவர்கள் தனி மடலிட்டால்( ">Link


">Link


">Link

Tuesday, June 20, 2006

மீண்டும் நயன்தாரா-சிபியின் சதியா?


நயனதாராவை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட கட்டம் கட்டி ஒதுக்கியே விட்டார்களாம். கோலிவுட்டின் லேட்டஸ்ட் 'ஹாட் டாக்' இதுதான்.

ஐயாவில் அறிமுகமாகியபோது நயனதாராவை அத்தனை பேரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தபோது உச்சத்திற்குப் போவார் என்று கட்டியம் கூறினார்கள்.

ஆனால் நயனதாராவின் பாதை திடீரென மாறியது. கிளாமருக்குத் தாவினார். உயரத்திற்குப் போகப் சர்ச்சைகளும் அவரைத் தொடர்ந்து ஓடோடி வந்தன.

சிபியுடன் காதல் என்ற செய்தியால் நயனதாராவின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்தது. அவரைத் தேடி வந்த தயாரிப்பாளர்கள் குறையத் தொடங்கினார். எப்போதும் சிபியுடன் ரவுண்ட் அடிக்க ஆரம்பித்ததால் அவரது கால்ஷீட் கேட்டு ரவுண்ட் அடித்தவர்கள் குறையத் தொடங்கினர்.

தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உருவானபோதுதான் சுதாரித்தார் நயனா. ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருந்தது. இப்போது நயனதாராவின் கையில் வல்லவனைத் தவிர புதுப் படம் எதுவும் இல்லையாம்.

தெலுங்கிலும் 'சிபி ஃபேக்டர்' நயனாவின் பெயருக்கு டேமேஜை ஏற்படுத்தி விட்டதாம்.

புதுசாக எதுவும் வரவில்லையாம். அச்சச்சோ மோசம் போயிரும் போலிருக்குமே என்று பயந்து போன நயனதாரா, நான் சிபியைக் காதலிக்கவில்லை, இரண்டு பேரும் நண்பர்கள்தான் என்று உட்டாலங்கடி பேட்டி கொடுத்துப் பார்த்தார்.

இப்படியாக ஆட்டமோ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது நயனதாராவின் சினிமா மார்க்கெட்.

சிபியால் சினிமாவும் போய், சிம்புவும் போயிவிடுவாரோ என்ற சிந்தனையில் இருக்கிறார் நயன்.

பின் குறிப்பு:
1.சிம்பு என்று வரும் இடங்களில் சிபி என்றும் சிபி என்று வரும் இடங்களில் சிம்பு என்றும் மாற்றி படிக்கவும். அச்சுப்பிழையாகிவிட்டது.மன்னிக்கவும் ஹி....ஹி..

2.மறுபடியும் நயன் தாரா வா என்று கீதாக்க அடிக்க வர வேண்டாம் ப்ளீஸ்....

3.சமர்ப்பனம் : நாரதர் வேலை கற்றுக்கொடுத்த குரு இணைய நாரதி பொன்ஸ் அவர்களுக்கு.


">Link


">Link


">Link

Saturday, June 17, 2006

நயன்தாரா மயக்கம்!!!



பல்டிஅடிப்பதற்குமுன்



வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால் ஷýட்டிங் நிறுத்தப்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சிம்பு. காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வே எடுக்காமல் நடித்து வந்தார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷýட்டிங் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் (சிறுவானி??)தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.ஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷýட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

(மேற்கொண்டு என்ன என்பதை அண்ணன் வா.ம அவர்கள் தனது ஆந்திரா ஸ்னாக்ஸ் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோ(ன்)ம்.!!!!!)

மயக்கத்திற்கான காரணத்தை குடும்ப குத்துவிளக்கு நயன்தாரா!!!!! ரசிகர் மன்ற தலைவர் சிபி அவர்கள் மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

Wednesday, May 31, 2006

சர்தார்ஜி கார்டூன்ஸ்

கருணாநிதி - ஜெ

செளதி,கல்ஃப்

ரிசர்வேஷன்


சர்ச்சைகளுக்கிடையில்.....






Friday, March 03, 2006

மீண்டும் ஜெயிலில் வைகோ.

முன்பு வேலுரில் இப்போது போயஸ்கார்டனில்.

இனி வைகோவை அடிக்கடி ஜெயா டிவியில் பார்க்கலாம். என்ன அம்மாவை பற்றி மட்டுமே பேசவேண்டும்.

சேதுசமுத்திரம்.... விடுதலைபுலிகள்......மூச்.... வாயை திறக்க கூடாது.

பச்சை கலர் துண்டு வாங்கிட்டிங்களா வைகோ?

வளர்மதி அக்காட்ட கேட்டு ஒரு அம்மா டாலர் மாட்டிகிட்டா 45 தொகுதியே கிடைத்துவிடும்.(யாரு...உங்க அம்மாவா.... இனிமேல் உங்களுக்கு ஒரே அம்மா ஜெ அம்மா தான்) சொந்த அம்மா மாரியம்மா பற்றி பேசிடாதிங்க அப்புறம் 45 குறைந்து 20 ஆ ஆகிடும். வேணும்னா இன்பதமிழன், சுலோசனா சம்பத் கிட்ட கேட்டு குடும்ப உறுப்பினர்களை திட்ட கற்றுக் கொள்ளுங்கள்.நால்லா திட்டினா துணைமுதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.(ஜெயித்தால்).

கூடு மாறி நானும் ஒரு சாதாரண அரசியல்வாதி தான் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

அம்மாவின் பின்னால் நின்றுகொண்டோ, கூழை கும்பிடு போட்டோ நான் ஒரு மிக மிக சாதாரண அரசியல்வாதி என்று நிரூபித்துவிடாதிர்கள் தயவுசெய்து

ஆஹா... வந்துட்ன்ய்யா.... வந்துட்டான்(ர்)...... - அம்மா

சென்னை : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளார். தற்போது தி.மு.க., கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் இன்று காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். நேற்று நடந்த தி.மு.க., மாநாட்டில் 25 தொகுதிகள் கேட்ட வைகோவுக்கு 22 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்த காரணத்தால் இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த வைகோ, இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க., கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார்.

அதிமுக 40. திமுக 22 - வைகோவிற்கு.

திமுக 22

முதலில் 20 தொகுதிகள் தருவதாக பேசினேம். பிறகு 21 தர ஒப்புக் கொண்டோம். நேற்று வைகோ என்னுடன் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், வைகோ 25 தொகுதிகளை கேட்கிறார். 22க்கு மேல் ஒரு சீட் கூட தர இயலாத நிலையில் தான் திமுக உள்ளது. அதை அவரிடம் தெளிவாகவே சொல்லிவிட்டோம் என்றார்.
கூட்டணியில் மதிமுக தொடருமா என்று கேட்டதற்கு, 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடரும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் வைகோவின் கட்அவுட்களை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது உண்மையல்ல. பந்தல்காரர்கள் தெரியாமல் வரிசைப்படி வைக்கமல் கட்அவுட்களை மாற்றி வைத்தார்கள். அதை பின்னர் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக என்ற வரிசைப்படி வைத்தோம். வைகோ மாநாட்டுக்கு வராவிட்டாலும் கூட அவருடைய கட்அவுட் அப்படியே தான் இருக்கும் என்றார்.


அதிமுக 40
அதிமுக 35 தொகுதிகள் வரைத் தயாராக உள்ளது. ஆனால், அவர்களுடன் 45 தொகுதிகளை வைகோ கேட்டு வருவதாகத் தெரிகிறது.
40 தொகுதிகள் தரப்பட்டால் உடனேயே திமுகவிடமிருந்து மதிமுக விலகும் என்றும் பேச்சு அடிபடுகின்றன.
அப்போது நிர்வாகிகள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்க, 2 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் தொடரும் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவது உறுதியாகியுள்ளது.

Tuesday, February 28, 2006

தினமலரின் நாடகம்

01.இது தேர்தல் பட்ஜெட்டாம்... * ஏழைகள், மாத சம்பளக்காரர்களை ஏமாற்றினார் ப.சிதம்பரம்* புதிய வரிகள் அறிவிக்காமல் அப்பாவி மக்கள் மீது 6,000 கோடி ரூபாய் சுமை* ஊதுபவர்களுக்கு செலவு கூடும்; ரயிலில் சாப்பிட்டால் பாக்கெட் காலி* எழுது பொருட்கள், மரச்சாமான்கள் விலை அதிகரிப்பு* பெண்கள் இடும் மருதாணி பவுடருக்கும் வரி விதிப்பு* வெயில், மழைக்கு பயன்படுத்தப்படும் குடை கூட தப்பவில்லை* மொசைக் கற்கள், கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? செலவு அதிகமாகும்* அரசு ஊழியர்கள் ஆறாவது சம்பள கமிஷன் பற்றி பேச்சே இல்லை

புதுடில்லி : மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட் ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டது என்ற கருத்தை உருவாக்கி இருக்கிறது. புதிய வரிகள் இல்லை என்றாலும் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் ரூ.ஆறாயிரம் கோடி சுமையை அப்பாவி மக்கள் தலையில் கட்ட வழி காட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், முதலீட்டாளர்கள், பணக்காரர்களுக்கு சாதகமாகவே பட்ஜெட் உள்ளது. கிராமப்புற மக்கள், மாதச் சம்பளக்காரர்கள், நகர்ப்புற ஏழைகளுக்கு பலன் தரும் பெரிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இல்லை. அவர்களை நிதி அமைச்சர் ஏமாற்றி விட்டார் என்றே கூறப்படுகிறது.

புதிய பட்ஜெட்டில் சிகரெட் மீதான கலால் வரி ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், புகை பிடிப்பவர்களுக்கு செலவு கூடும். ரயில் நிலையங்களில் ரயில்வே அல்லாத வெளி நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரயிலில் சாப்பிட்டால் பயணிகளின் பாக்கெட் காலியாகிவிடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இது தவிர எழுது பொருட்கள், மரச்சாமான்கள், பெண்கள் இடும் மருதாணி பவுடர், வெயில், மழைக்கு பயன்படுத்தப்படும் குடை ஆகியவற்றின் மீதான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொசைக் கற்கள், கம்ப்யூட்டர்களுக்கான வரியும் உயர்வில் இருந்து தப்பவில்லை. பட்ஜெட்டிற்கு பிறகு கம்ப்யூட்டர் வாங்கலாம் என்ற கனவில் இருந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நினைப்பில் மண் விழுந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆறாவது சம்பள கமிஷன் பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் இது குறித்து ப.சிதம்பரத்திடம் கேட்ட போது, ஏற்கனவே இதுப்பற்றி பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து விட்டதால் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை என்று சாக்குப் போக்கு சொல்லியுள்ளார்.லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 200607ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் தனி நபர் மற்றும் நிறுவனங்களின் வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. புதிய வரிகள் ஏதும் போடவில்லை. சிறிய கார்கள், குளிர்பானங்கள் உட்பட பல பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஏழை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவை வரி பிரிவில் ஏ.டி.எம்., சேவை, சொகுசு விமான பயணம் உட்பட 16 இனங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய "ஆறில் ஒன்று' திட்டம் அமலில் இருந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளது.கம்பெனிகளில் தொழிலாளர்களுக்குத் தரப்படும் கூடுதல் சலுகைகள் மீதான வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்கு பதிலாக அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. அதே போல் வங்கியில் இருந்து குறிப்பிட்ட அளவு பணம் எடுத்தால் வரி என்ற திட்டத்தையும் ப.சிதம்பரம் வாபஸ் பெற மறுத்து விட்டார்.

மாதச் சம்பளக்காரர்களுக்கு நிரந்தர வருமானவரி வரம்பில் மாற்றம் இல்லை. சேமிப்புக்குத் தரப்படும் சலுகையிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கடந்த ஆண்டு உள்ள வரிவிதிப்பே நீடிக்கிறது.இதுதவிர மத்திய விற்பனை வரி குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தொழிற்சாலை மற்றும் வர்த்த நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன. மின்சார திட்டங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் இல்லை என்பது அவர்களின் கவலையில் ஒன்று. பழைய இரும்பு பொருட்களின் மீது ஐந்து சதவீத வரி விதிக்கப்படும் என்பதால் சிறிய ஸ்டீல் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.பட்ஜெட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமாக பல அம்சங்கள் உள்ளன. இது இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. இது தவிர 37 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தொழிலாளர் சேம நல நிதியில் 80 சதவீதம் சிறப்பு டிபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த சிறப்பு டிபாசிட் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் சலுகைகள் ஏதும் இல்லை.புதிய வரிகள் ஏதும் இல்லை என்றாலும் நேரடி வரிகளை மாற்றி அமைத்தன் மூலம் ரூ. நான்காயிரம் கோடியும், மறைமுக வரிகள் மூலம்ரூ. இரண்டாயிரம் கோடியும் என மொத்தம் ரூ. ஆறாயிரம் கோடி கூடுதலாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.சேவை வரி பிரிவில் மேலும், 16 இனங்களை சேர்த்ததன் மூலம் இதன் மூலம் கிடைக்கும் வரி வருவாய் ரூ. 34 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும். இது நடப்பு நிதியாண்டை விட இரட்டிப்பு வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.கலாசார அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டையும் ப.சிதம்பரம் குறைத்துள்ளார். சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகடமி, நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா போன்ற அமைப்புகளுக்கு கடந்த ஆண்டுரூ. 865.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இது பட்ஜெட்டில்ரூ. 820 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.அடுத்ததாக சிறிய கார்கள் மீதான வரி குறைப்பு நடுத்தர மக்களுக்கு சாதகமாக அமையும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களில் பலர் இப்போதே சிறிய கார்கள் வைத்துள்ளனர். எனவே, இந்த வரி குறைப்பு அவர்களுக்கு பலன் அளிக்காது. அதே நேரத்தில் இணைய தளம், கிரெடிட் கார்டு, கேட்டரிங் சர்வீஸ் ஆகியவற்றை அவர்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகள் மீது வரி விதிப்பது அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மொத்த வளர்ச்சியும் அதிகரித்து நாடு பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக அடியெடுக்கும் போது, அடிப்படை மக்கள் பற்றி அக்கறைப்படாமல் மத்திய பட்ஜெட் வெளிப்புறத் தோற்ற அழகுடன் இருக்கிறது என்ற கருத்தை இடதுசாரிகள், எதிர்க்கட்சியான பா.ஜ., மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.


"என்னை மிக கவர்ந்த வரிகள்"


"புதிய பட்ஜெட்டில் சிகரெட் மீதான கலால் வரி ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், புகை பிடிப்பவர்களுக்கு செலவு கூடும்."

"ஏழை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவை வரி பிரிவில் ஏ.டி.எம்., சேவை, சொகுசு விமான பயணம் உட்பட 16 இனங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன."

"நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களில் பலர் இப்போதே சிறிய கார்கள் வைத்துள்ளனர். எனவே, இந்த வரி குறைப்பு அவர்களுக்கு பலன் அளிக்காது"


பூசணிக்காயை (நல்ல விஷயங்களை) 14ம் பக்கத்தில் வெளியிட்டு விட்டு,

இது தேர்தல் பட்ஜெட்டாம் என்று கூறி ஈரை பேனாக்கி பேனை பெருமளாக்கி(குறைகளை) எல்லாம் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாய் வெளியிடுவது தேர்தல் தந்திரமில்லையாம்.

ஆண்டவா.....................

''இன்னும் கொஞ்சம் குளோசா வாங்க.. குளோசா வாங்க''


''இன்னும் கொஞ்சம் குளோசா வாங்க.. குளோசா வாங்க'' (பத்திரிக்கை போட்டோகிராபர்கள்)

''நாங்கள் எப்பவுமே குளோஸ் தான்'' (சிரித்தபடியே வைகோ)

''(கூட்டணியை) நீங்க 'குளோஸ்' பண்ணிடாதீங்க'' (கருணாநிதி)

(திமுக தலைவர் கருணாநிதியை கூட்டணி விஷயமாக வைகோ சந்தித்தபோது நடந்த 'கலாட்டா உரையாடல்')

நன்றி thatstamil.com


 
Shed Ender
Free Web Counter
Shed Ender