.comment-link {margin-left:.6em;}

Chumma......

Tuesday, February 28, 2006

தினமலரின் நாடகம்

01.இது தேர்தல் பட்ஜெட்டாம்... * ஏழைகள், மாத சம்பளக்காரர்களை ஏமாற்றினார் ப.சிதம்பரம்* புதிய வரிகள் அறிவிக்காமல் அப்பாவி மக்கள் மீது 6,000 கோடி ரூபாய் சுமை* ஊதுபவர்களுக்கு செலவு கூடும்; ரயிலில் சாப்பிட்டால் பாக்கெட் காலி* எழுது பொருட்கள், மரச்சாமான்கள் விலை அதிகரிப்பு* பெண்கள் இடும் மருதாணி பவுடருக்கும் வரி விதிப்பு* வெயில், மழைக்கு பயன்படுத்தப்படும் குடை கூட தப்பவில்லை* மொசைக் கற்கள், கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமா? செலவு அதிகமாகும்* அரசு ஊழியர்கள் ஆறாவது சம்பள கமிஷன் பற்றி பேச்சே இல்லை

புதுடில்லி : மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த பொது பட்ஜெட் ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டது என்ற கருத்தை உருவாக்கி இருக்கிறது. புதிய வரிகள் இல்லை என்றாலும் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் ரூ.ஆறாயிரம் கோடி சுமையை அப்பாவி மக்கள் தலையில் கட்ட வழி காட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், முதலீட்டாளர்கள், பணக்காரர்களுக்கு சாதகமாகவே பட்ஜெட் உள்ளது. கிராமப்புற மக்கள், மாதச் சம்பளக்காரர்கள், நகர்ப்புற ஏழைகளுக்கு பலன் தரும் பெரிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இல்லை. அவர்களை நிதி அமைச்சர் ஏமாற்றி விட்டார் என்றே கூறப்படுகிறது.

புதிய பட்ஜெட்டில் சிகரெட் மீதான கலால் வரி ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், புகை பிடிப்பவர்களுக்கு செலவு கூடும். ரயில் நிலையங்களில் ரயில்வே அல்லாத வெளி நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரயிலில் சாப்பிட்டால் பயணிகளின் பாக்கெட் காலியாகிவிடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இது தவிர எழுது பொருட்கள், மரச்சாமான்கள், பெண்கள் இடும் மருதாணி பவுடர், வெயில், மழைக்கு பயன்படுத்தப்படும் குடை ஆகியவற்றின் மீதான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொசைக் கற்கள், கம்ப்யூட்டர்களுக்கான வரியும் உயர்வில் இருந்து தப்பவில்லை. பட்ஜெட்டிற்கு பிறகு கம்ப்யூட்டர் வாங்கலாம் என்ற கனவில் இருந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நினைப்பில் மண் விழுந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆறாவது சம்பள கமிஷன் பற்றி பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் இது குறித்து ப.சிதம்பரத்திடம் கேட்ட போது, ஏற்கனவே இதுப்பற்றி பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்து விட்டதால் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை என்று சாக்குப் போக்கு சொல்லியுள்ளார்.லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 200607ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் தனி நபர் மற்றும் நிறுவனங்களின் வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. புதிய வரிகள் ஏதும் போடவில்லை. சிறிய கார்கள், குளிர்பானங்கள் உட்பட பல பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஏழை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவை வரி பிரிவில் ஏ.டி.எம்., சேவை, சொகுசு விமான பயணம் உட்பட 16 இனங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய "ஆறில் ஒன்று' திட்டம் அமலில் இருந்தது தற்போது நீக்கப்பட்டுள்ளது.கம்பெனிகளில் தொழிலாளர்களுக்குத் தரப்படும் கூடுதல் சலுகைகள் மீதான வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதற்கு பதிலாக அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. அதே போல் வங்கியில் இருந்து குறிப்பிட்ட அளவு பணம் எடுத்தால் வரி என்ற திட்டத்தையும் ப.சிதம்பரம் வாபஸ் பெற மறுத்து விட்டார்.

மாதச் சம்பளக்காரர்களுக்கு நிரந்தர வருமானவரி வரம்பில் மாற்றம் இல்லை. சேமிப்புக்குத் தரப்படும் சலுகையிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கடந்த ஆண்டு உள்ள வரிவிதிப்பே நீடிக்கிறது.இதுதவிர மத்திய விற்பனை வரி குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தொழிற்சாலை மற்றும் வர்த்த நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன. மின்சார திட்டங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் இல்லை என்பது அவர்களின் கவலையில் ஒன்று. பழைய இரும்பு பொருட்களின் மீது ஐந்து சதவீத வரி விதிக்கப்படும் என்பதால் சிறிய ஸ்டீல் தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.பட்ஜெட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமாக பல அம்சங்கள் உள்ளன. இது இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. இது தவிர 37 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தொழிலாளர் சேம நல நிதியில் 80 சதவீதம் சிறப்பு டிபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்த சிறப்பு டிபாசிட் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் சலுகைகள் ஏதும் இல்லை.புதிய வரிகள் ஏதும் இல்லை என்றாலும் நேரடி வரிகளை மாற்றி அமைத்தன் மூலம் ரூ. நான்காயிரம் கோடியும், மறைமுக வரிகள் மூலம்ரூ. இரண்டாயிரம் கோடியும் என மொத்தம் ரூ. ஆறாயிரம் கோடி கூடுதலாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.சேவை வரி பிரிவில் மேலும், 16 இனங்களை சேர்த்ததன் மூலம் இதன் மூலம் கிடைக்கும் வரி வருவாய் ரூ. 34 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும். இது நடப்பு நிதியாண்டை விட இரட்டிப்பு வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.கலாசார அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டையும் ப.சிதம்பரம் குறைத்துள்ளார். சாகித்ய அகடமி, சங்கீத நாடக அகடமி, நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா போன்ற அமைப்புகளுக்கு கடந்த ஆண்டுரூ. 865.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இது பட்ஜெட்டில்ரூ. 820 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.அடுத்ததாக சிறிய கார்கள் மீதான வரி குறைப்பு நடுத்தர மக்களுக்கு சாதகமாக அமையும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களில் பலர் இப்போதே சிறிய கார்கள் வைத்துள்ளனர். எனவே, இந்த வரி குறைப்பு அவர்களுக்கு பலன் அளிக்காது. அதே நேரத்தில் இணைய தளம், கிரெடிட் கார்டு, கேட்டரிங் சர்வீஸ் ஆகியவற்றை அவர்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகள் மீது வரி விதிப்பது அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மொத்த வளர்ச்சியும் அதிகரித்து நாடு பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக அடியெடுக்கும் போது, அடிப்படை மக்கள் பற்றி அக்கறைப்படாமல் மத்திய பட்ஜெட் வெளிப்புறத் தோற்ற அழகுடன் இருக்கிறது என்ற கருத்தை இடதுசாரிகள், எதிர்க்கட்சியான பா.ஜ., மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.


"என்னை மிக கவர்ந்த வரிகள்"


"புதிய பட்ஜெட்டில் சிகரெட் மீதான கலால் வரி ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், புகை பிடிப்பவர்களுக்கு செலவு கூடும்."

"ஏழை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவை வரி பிரிவில் ஏ.டி.எம்., சேவை, சொகுசு விமான பயணம் உட்பட 16 இனங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன."

"நகரப் பகுதிகளில் உள்ள நடுத்தர மக்களில் பலர் இப்போதே சிறிய கார்கள் வைத்துள்ளனர். எனவே, இந்த வரி குறைப்பு அவர்களுக்கு பலன் அளிக்காது"


பூசணிக்காயை (நல்ல விஷயங்களை) 14ம் பக்கத்தில் வெளியிட்டு விட்டு,

இது தேர்தல் பட்ஜெட்டாம் என்று கூறி ஈரை பேனாக்கி பேனை பெருமளாக்கி(குறைகளை) எல்லாம் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாய் வெளியிடுவது தேர்தல் தந்திரமில்லையாம்.

ஆண்டவா.....................

1 Comments:

  • அதிமுக நாளேட்டில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

    By Blogger வானம்பாடி, at 2:24 AM  

Post a Comment

<< Home


 
Shed Ender
Free Web Counter
Shed Ender