நயன்தாரா மயக்கம்!!!



வல்லவன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை நயனதாரா மயங்கி விழுந்ததால் ஷýட்டிங் நிறுத்தப்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சிம்பு. காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வே எடுக்காமல் நடித்து வந்தார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷýட்டிங் நிறுத்தப்பட்டது.
தண்ணீர் (சிறுவானி??)தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். பின்னர் டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர் கூறியதால் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நயனதாரா தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போய் ஓய்வு எடுத்தார்.ஓய்வுக்குப் பின்னர் அவர் தெலுங்குப் பட ஷýட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
(மேற்கொண்டு என்ன என்பதை அண்ணன் வா.ம அவர்கள் தனது ஆந்திரா ஸ்னாக்ஸ் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோ(ன்)ம்.!!!!!)
மயக்கத்திற்கான காரணத்தை குடும்ப குத்துவிளக்கு நயன்தாரா!!!!! ரசிகர் மன்ற தலைவர் சிபி அவர்கள் மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.
20 Comments:
மனசு,
நீங்க மனசு இல்லையா? அதான் புரிஞ்சுக்கறீங்க.
By
Geetha Sambasivam, at 12:58 AM
நாட்டுக்குத் தேவையான நல்ல விஷயத்தைக் கொடுத்த மனசு அவர்களுக்குப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
By
Geetha Sambasivam, at 1:00 AM
இதெல்லாம் நாட்டுக்கு ரெம்ப தேவைக்கா...
அடுத்து குப்பண்ணே ஒரு நமிதா பத்வு போடுறேன்னு சொல்லியிிருக்கார். வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.:))))))
By
manasu, at 2:54 AM
ராசா..நாம் எப்போ நமீதா பதிவு போடறேன்னு சொன்னேன். அதையும் நீங்களே பண்ணுங்க..:-)
By
Chellamuthu Kuppusamy, at 6:34 AM
கவுத்துட்டீங்களே குப்பு!!!
By
manasu, at 10:47 AM
ஏங்க, தமிழ்மணத்துல இல்லைன்னா, வந்து சொல்றதில்லையா? இந்த மாதிரி ஹாட் நியூஸ் எல்லாம் எங்களுக்கு பின்ன எப்படித் தெரியுமாம்?
மனசு, இதெல்லாம் ரொம்ப டூ மச்சுங்க.. குறைஞ்ச பட்சம் பதிவுல உள்ளவங்களிடமாவது சொல்லுங்க.. வந்து பார்க்கட்டும் :)
உங்க இதுவரை போட்ட பதிவுகள்லயே வலைப்பூ தலைப்புக்கு ஏற்ற பதிவு இது ஒண்ணுதான் :)
//காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வந்தது. இதில் கலந்து கொண்டு நயனதாரா ஓய்வே எடுக்காமல் நடித்து வந்தார்.
//
ஆமாம், நயனை இவ்வளவு கொடுமைப் படுத்துவதைக் கண்டிக்க யாரும் டீக்குடிக்கலையா?
By
பொன்ஸ்~~Poorna, at 2:35 PM
Beautiful!! :-)
By
Omni, at 11:20 PM
மனசு, நேத்திக்கு மறுபடி சண்டை Tata வோட. BSNL சேவை எப்படி இருக்குமோ தெரியலை. Relianceகாரங்க wireless system கொண்டு வந்திருக்காங்க. அது பத்தித் தீர விசாரிச்சுட்டு மாறலாம்னு யோசனை.
அப்புறம் தெற்காவணி மூலவீதியிலே முத்துசாமிச்செட்டியார் கடைதான் எங்க family கடை. ஆனால் எல்லாரும் இப்போ பிரிஞ்சுட்டாங்க. தனித்தனிக் கடையாக இருக்கு. காலமாற்றத்தில் இதுவும் ஒண்ணு.
By
Geetha Sambasivam, at 12:24 AM
இன்னும் நயன் தாரா மயக்கம் தெளியலியா? வேறே பதிவே வரலை.
By
Geetha Sambasivam, at 12:26 AM
சங்க தலை சிபி டீகுடிச்சிட்டார் போல, ஆளே காணோம்.
தமிழ் மணத்தில் இல்லை, அது ஏதோ நீ use பண்ர பாஃன்ட் என்னால ஒத்துக்க முடியாது அப்பால போங்குது.நாமளே எங்க வீட்டுக்காரரும் கச்சேரி போறார் ஸ்டைலில் சும்மா எதாவது போடனும்மேன்னு பதியிறது. இதுக்கு இவ்வளவு மெனக்கெட்டா போதும்னு விட்டாச்சு. பதிவு ஆரம்பிச்சதே மறுமொழி இடத்தான்.
By
manasu, at 2:37 AM
அவ்வை சண்முகி ல டெல்லிகணேஷ் சொல்ற மாதிரி தெளிய வச்சு தெளிய வச்சுசில்ல அடிக்கிறாங்க கீதாக்கா...
By
manasu, at 2:41 AM
மனசு, முடியாதுனு எனாக்குப் புரியாதா? ஒரு ஆத்தாமைலே சொல்றேன். வேறு என்ன? எனக்கு முதல் முதல் வந்ததில் இருந்தே சென்னை பிடிக்காமல் போனது. சிலருக்குச் சில ஊர் பிடிக்கும், சில ஊர் பிடிக்காது. காரணம் என்னனு சொல்றது?
By
Geetha Sambasivam, at 4:19 AM
இன்னுமா நயன் தாரா போகலை? வேறே பதிவு போடுங்க மனசு, அப்புறம் நம்ம கடை மதுரைலே SMP (முத்துசாமி செட்டியார் பையன் பொன்னுசாமிச் செட்டியார்) கடைதான். அவங்க எல்லாம் அப்பா கிட்டே படிச்சவங்க.
By
Geetha Sambasivam, at 4:22 AM
kudumba kuthuvillakaa..?
hahaa, ithu thaan sema comedy. :)
By
ambi, at 6:05 AM
அம்பி அடக்கிவாசிங்க, அப்புறம் மன்றத்துல இருந்து ஆட்டோ வரும் -:))))
By
manasu, at 7:29 AM
//தண்ணீர் (சிறுவானி??) தெளித்து நயனதாராவை அங்கிருந்தவர்கள் தெளிவித்தனர். //
சபாஷ் மனசு!
By
நாமக்கல் சிபி, at 8:17 AM
Anyway! படங்களுக்கு மிக்க நன்றி!
By
நாமக்கல் சிபி, at 5:51 AM
இந்தப் பதிவுல இருக்குற ரெண்டாவது படத்தை இலவசக் கொத்தனாருக்கு சிபியை விட்டு காமிக்கச் சொல்லனும். நயந்தாராவுக்கு ஒரு கையில ஆறு விரல்னு ஒரு புருடாவை அவுத்து விட்டுட்டாரு.
:)
By
கைப்புள்ள, at 4:24 AM
சேட்டா எந்தா ஒரு ஓர்ம சக்தி?!?
By
manasu, at 5:55 AM
unmayileye
naattukku rombu thevaiya than irunthathu.
konjam mudinja nammavalippovayum monthu parkarathu...
By
Anonymous, at 3:42 AM
Post a Comment
<< Home