.comment-link {margin-left:.6em;}

Chumma......

Friday, March 03, 2006

மீண்டும் ஜெயிலில் வைகோ.

முன்பு வேலுரில் இப்போது போயஸ்கார்டனில்.

இனி வைகோவை அடிக்கடி ஜெயா டிவியில் பார்க்கலாம். என்ன அம்மாவை பற்றி மட்டுமே பேசவேண்டும்.

சேதுசமுத்திரம்.... விடுதலைபுலிகள்......மூச்.... வாயை திறக்க கூடாது.

பச்சை கலர் துண்டு வாங்கிட்டிங்களா வைகோ?

வளர்மதி அக்காட்ட கேட்டு ஒரு அம்மா டாலர் மாட்டிகிட்டா 45 தொகுதியே கிடைத்துவிடும்.(யாரு...உங்க அம்மாவா.... இனிமேல் உங்களுக்கு ஒரே அம்மா ஜெ அம்மா தான்) சொந்த அம்மா மாரியம்மா பற்றி பேசிடாதிங்க அப்புறம் 45 குறைந்து 20 ஆ ஆகிடும். வேணும்னா இன்பதமிழன், சுலோசனா சம்பத் கிட்ட கேட்டு குடும்ப உறுப்பினர்களை திட்ட கற்றுக் கொள்ளுங்கள்.நால்லா திட்டினா துணைமுதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.(ஜெயித்தால்).

கூடு மாறி நானும் ஒரு சாதாரண அரசியல்வாதி தான் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

அம்மாவின் பின்னால் நின்றுகொண்டோ, கூழை கும்பிடு போட்டோ நான் ஒரு மிக மிக சாதாரண அரசியல்வாதி என்று நிரூபித்துவிடாதிர்கள் தயவுசெய்து

ஆஹா... வந்துட்ன்ய்யா.... வந்துட்டான்(ர்)...... - அம்மா

சென்னை : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளார். தற்போது தி.மு.க., கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் இன்று காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். நேற்று நடந்த தி.மு.க., மாநாட்டில் 25 தொகுதிகள் கேட்ட வைகோவுக்கு 22 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்த காரணத்தால் இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த வைகோ, இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க., கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார்.

அதிமுக 40. திமுக 22 - வைகோவிற்கு.

திமுக 22

முதலில் 20 தொகுதிகள் தருவதாக பேசினேம். பிறகு 21 தர ஒப்புக் கொண்டோம். நேற்று வைகோ என்னுடன் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், வைகோ 25 தொகுதிகளை கேட்கிறார். 22க்கு மேல் ஒரு சீட் கூட தர இயலாத நிலையில் தான் திமுக உள்ளது. அதை அவரிடம் தெளிவாகவே சொல்லிவிட்டோம் என்றார்.
கூட்டணியில் மதிமுக தொடருமா என்று கேட்டதற்கு, 22 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடரும் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் வைகோவின் கட்அவுட்களை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது உண்மையல்ல. பந்தல்காரர்கள் தெரியாமல் வரிசைப்படி வைக்கமல் கட்அவுட்களை மாற்றி வைத்தார்கள். அதை பின்னர் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக என்ற வரிசைப்படி வைத்தோம். வைகோ மாநாட்டுக்கு வராவிட்டாலும் கூட அவருடைய கட்அவுட் அப்படியே தான் இருக்கும் என்றார்.


அதிமுக 40
அதிமுக 35 தொகுதிகள் வரைத் தயாராக உள்ளது. ஆனால், அவர்களுடன் 45 தொகுதிகளை வைகோ கேட்டு வருவதாகத் தெரிகிறது.
40 தொகுதிகள் தரப்பட்டால் உடனேயே திமுகவிடமிருந்து மதிமுக விலகும் என்றும் பேச்சு அடிபடுகின்றன.
அப்போது நிர்வாகிகள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்க, 2 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியிருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் தொடரும் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவது உறுதியாகியுள்ளது.


 
Shed Ender
Free Web Counter
Shed Ender