மீண்டும் நயன்தாரா-சிபியின் சதியா?

நயனதாராவை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட கட்டம் கட்டி ஒதுக்கியே விட்டார்களாம். கோலிவுட்டின் லேட்டஸ்ட் 'ஹாட் டாக்' இதுதான்.
ஐயாவில் அறிமுகமாகியபோது நயனதாராவை அத்தனை பேரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தபோது உச்சத்திற்குப் போவார் என்று கட்டியம் கூறினார்கள்.
ஆனால் நயனதாராவின் பாதை திடீரென மாறியது. கிளாமருக்குத் தாவினார். உயரத்திற்குப் போகப் சர்ச்சைகளும் அவரைத் தொடர்ந்து ஓடோடி வந்தன.
சிபியுடன் காதல் என்ற செய்தியால் நயனதாராவின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்தது. அவரைத் தேடி வந்த தயாரிப்பாளர்கள் குறையத் தொடங்கினார். எப்போதும் சிபியுடன் ரவுண்ட் அடிக்க ஆரம்பித்ததால் அவரது கால்ஷீட் கேட்டு ரவுண்ட் அடித்தவர்கள் குறையத் தொடங்கினர்.
தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உருவானபோதுதான் சுதாரித்தார் நயனா. ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருந்தது. இப்போது நயனதாராவின் கையில் வல்லவனைத் தவிர புதுப் படம் எதுவும் இல்லையாம்.
தெலுங்கிலும் 'சிபி ஃபேக்டர்' நயனாவின் பெயருக்கு டேமேஜை ஏற்படுத்தி விட்டதாம்.
புதுசாக எதுவும் வரவில்லையாம். அச்சச்சோ மோசம் போயிரும் போலிருக்குமே என்று பயந்து போன நயனதாரா, நான் சிபியைக் காதலிக்கவில்லை, இரண்டு பேரும் நண்பர்கள்தான் என்று உட்டாலங்கடி பேட்டி கொடுத்துப் பார்த்தார்.
இப்படியாக ஆட்டமோ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது நயனதாராவின் சினிமா மார்க்கெட்.
சிபியால் சினிமாவும் போய், சிம்புவும் போயிவிடுவாரோ என்ற சிந்தனையில் இருக்கிறார் நயன்.
பின் குறிப்பு:
1.சிம்பு என்று வரும் இடங்களில் சிபி என்றும் சிபி என்று வரும் இடங்களில் சிம்பு என்றும் மாற்றி படிக்கவும். அச்சுப்பிழையாகிவிட்டது.மன்னிக்கவும் ஹி....ஹி..
2.மறுபடியும் நயன் தாரா வா என்று கீதாக்க அடிக்க வர வேண்டாம் ப்ளீஸ்....
3.சமர்ப்பனம் : நாரதர் வேலை கற்றுக்கொடுத்த குரு இணைய நாரதி பொன்ஸ் அவர்களுக்கு.
">Link
">Link
">Link
20 Comments:
தேன் கூடக் குடிக்கும் என்பார்கள். வரட்டுமா?
By
Geetha Sambasivam, at 3:51 AM
சிபி அப்பாவியாக இருக்கிறார் என்று இப்படித்தான் அவர் மண்டையைப் போட்டு உருட்டுவதா? அது சரி, நயன் தாராவிடம் என்னத்தைப் பார்த்து விட்டு இப்படி இளிக்கிறீங்க? உங்க வீட்டிலே போட்டுக் கொடுக்கட்டுமா?
By
Geetha Sambasivam, at 3:52 AM
சிபியா...அப்பாவியா...
//நயன் தாராவிடம் என்னத்தைப் பார்த்து விட்டு இப்படி இளிக்கிறீங்க?//
சிபிட்ட தான் கேட்கனும்!!!!!!
//உங்க வீட்டிலே போட்டுக் கொடுக்கட்டுமா?//
எப்ப கட்சி மாறினீங்கன்னு கேட்பாங்க!!!
By
manasu, at 5:33 AM
மனசு, ரொம்பவே தேறிட்டீங்க.. குருவை மிஞ்சும் சிஷ்யனாய்ட்டீங்க போங்க..
எங்கே சிபி? மனசொடிஞ்சு ஏதாவது முயற்சி பண்ணப் போறாரு.. ஏற்கனவே இப்போ தான் கழுதைப் புலி கிட்டெர்ந்து தேவைக் காப்பாத்தினோம்.. அடுத்து இன்னோரு காஷுயாலிடியைக் கட்சி தாங்காது!!
By
பொன்ஸ்~~Poorna, at 5:44 AM
நமிதாவை தேடிப்போய்ட்டாரோ???
By
manasu, at 7:59 AM
நீங்க தான் இன்னும் 9 தாராவை விட்டு வெளியே வரவே இல்லையே? அப்புறம் எங்கேருந்து படிக்கறது?
By
Geetha Sambasivam, at 1:47 AM
தொடரட்டும் உங்கள் கலைச் சேவை... :-)
By
Chellamuthu Kuppusamy, at 12:50 AM
சிபி ரொம்ப நல்லவர். நாமக்கல்லைச் சேர்ந்தவர். தமிழில் வலைப்பூவெல்லாம் கூட போடுகிறார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
By
dondu(#11168674346665545885), at 2:39 AM
குப்ஸ் தொடருவோம்! கலைச்சேவை!
ஆயிரமாவது ஹிட் அடித்த திரு.டோண்டுவிற்கு நன்றி.
By
manasu, at 8:56 PM
//சிம்பு என்று வரும் இடங்களில் சிபி என்றும் சிபி என்று வரும் இடங்களில் சிம்பு என்றும் மாற்றி படிக்கவும். அச்சுப்பிழையாகிவிட்டது.மன்னிக்கவும் //
அச்சுப் பிழையா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு படிக்க!
By
நாமக்கல் சிபி, at 7:56 AM
//சிபி அப்பாவியாக இருக்கிறார் என்று இப்படித்தான் அவர் மண்டையைப் போட்டு உருட்டுவதா?//
அட! மேடம்! என்னை சில பேரு அடப்பாவின்னு சொல்றாங்க! இருந்தாலும் என்னை அப்பாவின்னு சொன்னதுக்கு ஒரு நன்றி.
(தலை..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
By
நாமக்கல் சிபி, at 7:58 AM
//சிபிட்ட தான் கேட்கனும்!!!!!!//
நீர் இளிப்பதற்கு என்னிடம் கேட்க வேண்டுமா?
நல்ல கதையா இருக்கே! சரி சரி இனிமே இப்படியெல்லாம் இளிக்காதீங்க!
By
நாமக்கல் சிபி, at 8:00 AM
//மனசு, ரொம்பவே தேறிட்டீங்க.. குருவை மிஞ்சும் சிஷ்யனாய்ட்டீங்க போங்க.. //
இல்லைங்க! அவரு நயன் தாரா பேருல ஒரு பதிவைப் போட்டுட்டு நம்மளை விளம்பரப் படுத்தரார்.
//
எங்கே சிபி? மனசொடிஞ்சு ஏதாவது முயற்சி பண்ணப் போறாரு.. ஏற்கனவே இப்போ தான் கழுதைப் புலி கிட்டெர்ந்து தேவைக் காப்பாத்தினோம்.. அடுத்து இன்னோரு காஷுயாலிடியைக் கட்சி தாங்காது!! //
அட! ஆமாங்க! ஒரு பாட்டில் இருமல் சிரப்பை ஒரே கல்ப்பா அடிச்சி பார்த்துட்டேன். இப்ப டாக்டர் ஒரு கசப்பான சிரப்பை எழுதிக் கொடுத்துட்டார்.
By
நாமக்கல் சிபி, at 8:02 AM
//நமிதாவை தேடிப்போய்ட்டாரோ??? //
அண்ணன் எப்படா போவான், திண்ணை எப்போ காலி ஆகும்னே சில பேரு இருக்காங்கப்பா!
நான் எங்கயும் போகலை!
By
நாமக்கல் சிபி, at 8:03 AM
//சிபி ரொம்ப நல்லவர். நாமக்கல்லைச் சேர்ந்தவர். தமிழில் வலைப்பூவெல்லாம் கூட போடுகிறார்.
//
நல்ல சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள் டோண்டு சார். மிக்க நன்றி.
(ஆனால் எதற்கு? எனக்கு நற்சான்றிதழ் கொடுத்து ஒதுக்கிவிட்டு தாங்களும் போட்டியாகி விடாதீர்கள்! :(
)
By
நாமக்கல் சிபி, at 8:04 AM
மனசு கேக்குது இன்னொரு நயன் போட்டோ.. பரிசீலிக்கவும்
By
Chellamuthu Kuppusamy, at 5:29 AM
//மனசு கேக்குது இன்னொரு நயன் போட்டோ.. பரிசீலிக்கவும்//
ம்ஹும்..வில்லர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
:(
By
நாமக்கல் சிபி, at 5:49 AM
மனசு!
நீங்கள் ஏன் இன்னும் மறுமொழி மட்டுறுத்தலை (Comment Moderation)எனேபிள் செய்யவில்லை?
By
நாமக்கல் சிபி, at 5:50 AM
நீங்க கேட்டதற்கு ஏற்ப குடும்ப குத்து விளக்கு நயன் தாரா படம் போட ஒரு செய்தி இருக்கு, ஆனா நம்ம சிபி அடிக்க வந்திருவாரோன்னு ஒரு தயக்கம். இருந்தாலும் கோரிக்கை பரிசீலிக்க படும்.
மட்டுறுத்தல் எதுக்கு சிபி, நம்ம எதோ நயன்தாரா வையும் உங்களயும் வச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கோம்.
By
manasu, at 8:54 AM
போட்டிக்கெல்லாம் வரமாட்டேன் சிபி அவர்களே. சின்னப் பசங்களுக்கும் அவர்களது கோட்டா ஃபிகர்கள் கிட்டக் கடவது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
By
dondu(#11168674346665545885), at 9:00 PM
Post a Comment
<< Home