மீண்டும் நயன்தாரா-சிபியின் சதியா?

நயனதாராவை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட கட்டம் கட்டி ஒதுக்கியே விட்டார்களாம். கோலிவுட்டின் லேட்டஸ்ட் 'ஹாட் டாக்' இதுதான்.
ஐயாவில் அறிமுகமாகியபோது நயனதாராவை அத்தனை பேரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.
சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தபோது உச்சத்திற்குப் போவார் என்று கட்டியம் கூறினார்கள்.
ஆனால் நயனதாராவின் பாதை திடீரென மாறியது. கிளாமருக்குத் தாவினார். உயரத்திற்குப் போகப் சர்ச்சைகளும் அவரைத் தொடர்ந்து ஓடோடி வந்தன.
சிபியுடன் காதல் என்ற செய்தியால் நயனதாராவின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்தது. அவரைத் தேடி வந்த தயாரிப்பாளர்கள் குறையத் தொடங்கினார். எப்போதும் சிபியுடன் ரவுண்ட் அடிக்க ஆரம்பித்ததால் அவரது கால்ஷீட் கேட்டு ரவுண்ட் அடித்தவர்கள் குறையத் தொடங்கினர்.
தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லை என்ற நிலை உருவானபோதுதான் சுதாரித்தார் நயனா. ஆனால் அதற்குள் காலம் கடந்து போயிருந்தது. இப்போது நயனதாராவின் கையில் வல்லவனைத் தவிர புதுப் படம் எதுவும் இல்லையாம்.
தெலுங்கிலும் 'சிபி ஃபேக்டர்' நயனாவின் பெயருக்கு டேமேஜை ஏற்படுத்தி விட்டதாம்.
புதுசாக எதுவும் வரவில்லையாம். அச்சச்சோ மோசம் போயிரும் போலிருக்குமே என்று பயந்து போன நயனதாரா, நான் சிபியைக் காதலிக்கவில்லை, இரண்டு பேரும் நண்பர்கள்தான் என்று உட்டாலங்கடி பேட்டி கொடுத்துப் பார்த்தார்.
இப்படியாக ஆட்டமோ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது நயனதாராவின் சினிமா மார்க்கெட்.
சிபியால் சினிமாவும் போய், சிம்புவும் போயிவிடுவாரோ என்ற சிந்தனையில் இருக்கிறார் நயன்.
பின் குறிப்பு:
1.சிம்பு என்று வரும் இடங்களில் சிபி என்றும் சிபி என்று வரும் இடங்களில் சிம்பு என்றும் மாற்றி படிக்கவும். அச்சுப்பிழையாகிவிட்டது.மன்னிக்கவும் ஹி....ஹி..
2.மறுபடியும் நயன் தாரா வா என்று கீதாக்க அடிக்க வர வேண்டாம் ப்ளீஸ்....
3.சமர்ப்பனம் : நாரதர் வேலை கற்றுக்கொடுத்த குரு இணைய நாரதி பொன்ஸ் அவர்களுக்கு.
">Link
">Link
">Link